September 22, 2016

தரித்திரம் விலக்குவார் வைரவன்பட்டி பைரவர்!

தரித்திரம் விலக்குவார் வைரவன்பட்டி பைரவர்!

 https://www.instagram.com/p/BKhhyyfDsdi/?taken-by=mytempleapp

 காரைக்குடி- திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என்.வைரவன்பட்டி திருத்தலம். இங்கே, அருள்மிகு வளரொளி நாதராகக் கோயில்கொண்டிருக்கிறார் ஈசன். சித்தர்களுக்கு ஒளி வடிவாய் காட்சி தந்ததால் இந்த  நாமகரணம்.  இங்கு அருளும் அம்மையின் திருநாமம்- ஸ்ரீவடிவுடைநாயகி.
 
பாண்டியர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்தக்கோயில்  நகரத்தார் போற்றிப் பரவும் 9 ஆலயங்களில் முதன்மையானது என்கிறார்கள் செட்டிநாட்டு மக்கள். இந்தக் கோயிலின் சிறப்பம்சம் ஸ்ரீபைரவ தரிசனம். அம்மையப்பனுக்கு அடுத்த பிரதான தெய்வமாக இவரே இங்கு வழிபடப்படுகிறார்.
 
தேவாதிதேவர்களாலும் வெல்ல முடியாத வல்லமை பெற்றிருந்தான் சம்பகாசுரன். அவனை, சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய ஸ்ரீபைரவ மூர்த்தி வதம் செய்தார். இதை நினைவுகூரும் வகையில் வருடம்தோறும் ஐப்பசி மாதத்தில், சம்பகா சஷ்டி விழா இங்கே கொண்டாடப்படுகிறது. திருக்கோயிலில் ஸ்ரீவளரொளி நாதரும் ஸ்ரீவயிரவரும் அருகருகே சந்நிதி கொண்டுள்ளனர் (ஸ்ரீபைரவரையே வயிரவர், வைரவர் என்றெல்லாம் அழைப்பர்).

 பைரவ தீர்த்தம்!...

முழு கதையை படிக்க, MyTemple App'ஐ டவுன்லோட் செய்யுங்கள்.


வணக்கம்.
நான் MyTemple App மூலமாக தினசரி தரிசனங்கள், அற்புதமான தெய்வீகக் கதைகள், அழகிய ஆலயங்கள் மற்றும் நம் இந்து மதம், பாரதப் பண்பாடு ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் தினமும் பெறுகிறேன்.
MyTemple Appல் நான் பெற்ற தெய்வீக அனுபவத்தை நீங்களும் பெற வேண்டும். இப்பொழுதே டவுண்லோட் செய்யுங்கள்!
For Android  -http://goo.gl/7RqnYE
For Apple  -http://goo.gl/XYOMcy

September 20, 2016

நம: பார்வதீ பதயே என்பது ஏன்? - விளக்குகிறார் காஞ்சிபெரியவர்

நம: பார்வதீ பதயே என்பது ஏன்? - விளக்குகிறார் காஞ்சிபெரியவர்

சிவன் கோயில்களில் "நம:பார்வதீபதயே' என ஒருவர் சொல்ல, "ஹரஹர மகாதேவா' என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன?

பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். "பார்வதீபதி' என்கிற அவரே உலகுக்கெல்லாம் தகப்பனார். பெரிய தெய்வமானதால் அவருக்கு "மகாதேவன்' என்றும் பெயர்.

பூலோகத்தில் ஒரு குழந்தை அவரை "ஹர ஹர' என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தது. அந்தக் குழந்தைக்கு "ஞானசம்பந்தர்' என்று பெயர். இந்தக் குழந்தை ஊர் ஊராக "ஹர ஹர' நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து, எல்லா ஜனங்களும் "அரோஹரா' என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷம் கேட்டதும், உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் உடனடியாகக் காணாமல் ஓடிப்போய் விட்டது.

வையத்தில் அதாவது உலகத்தில் கஷ்டமே இல்லாமல் போனது. "என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும். அதனால், உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும்,'' என்று சம்பந்தக் குழந்தை தேவாரம் பாடிற்று.

""அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே'' அரன் என்றால் ஹரன். ஹரன் என்றால் சிவன்.

இப்போது நான் (பெரியவர்) ""நம: பார்வதீபதயே!'' என்று சொல்வேன். உடனே நீங்கள் அம்மையான பார்வதியையும் அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு அந்தக் குழந்தை சொன்ன மாதிரியே பக்தியோடு ""ஹர ஹர மகாதேவா'' என்று சொல்ல வேண்டும். நம: பார்வதீ பதயே!

முருகனை வழிபடும்போது “அரோகரா” போடுவதன் பொருள் என்ன?

தெய்வீக விளக்கங்கள்
அகிலமெங்கும் தெய்வீகம்
முருகனை வழிபடும்போது “அரோகரா” போடுவதன் பொருள் என்ன?
“அரோகரா” என்பதைப் பிரித்தால், அர+ஓ+ஹர எனப் பொருள்படும். அரன், கரன் (ஹரன்) இரண்டுமே, சிவனாரின் திருப்பெயர்கள். ஓங்கார ஒலியுடன் சிவநாமத்தை உச்சரிப்பதே “அர ஓ ஹர” என்பதன் பொருள். இந்த “அர ஓ ஹர” என்பதே , ரகர விகுதி, ஓகார நெடிலுடன் சேர்ந்து “அரோஹரா” ஆனது!
இதற்கு இப்படியும் பொருள்கொள்வர். “அர ஹரோ ஹரா” (அரனே எங்கள் துன்பங்களை அழிப்பாயாக!) என்பதே “அரோஹரா” எனச் சுருங்கியது என்பர். ஞானசம்பந்தப்பெருமானாலேயே இவ்வழக்கம் உருவானதாகவும், ஒரு செவிவழிக்கதை வழங்குகிறது.
திருவைந்தெழுத்து, எத்துணை சக்தி வாய்ந்ததோ, எம்பெருமானின் அத்தனை திருநாமங்களும் அதேயளவு சக்திவாய்ந்தவை என்பது மெய்ஞ்ஞானிகள் கூறும் உண்மை. அவ்வகையில், “அரன்” எனும் நாமமும் மிகுந்த சக்தி படைத்ததே! திருமுறை ஓதியபின், நாம் “அரகர மாதேவா” என்பதும், வடநாட்டார், “ஹர் ஹர் மஹாதேவா” என்பதும் இதனாற்றான்!
எனினும், இறைவனை “அர ஓ ஹர” எனப்போற்றும் வழக்கம், தமிழ்மண்ணிலேயே வழக்கமாக இருந்திருக்கிறது. அதனாற்றான் போலும், விசேடமாக தமிழரின் தெய்வமாம், முருகனின் தலங்களிலெல்லாம், இன்று “அர ஓ ஹர” முழக்கம் கேட்கிறது.
ஈழத்தைப் பொறுத்தவரை, முருகன் ஆலயங்களில் மட்டுமன்றி, சிவன் – பிள்ளையார் – அம்மன், ஏன் திருமால் ஆலயங்களிலும் “”அரோகரா” முழக்கம் கேட்கக் காணலாம். இது, சைவர்கள் எந்தத் தெய்வத்தை வணங்கினும், அத்தெய்வங்களில், தம் முழுமுதலாம், அரனையே காண்கின்றனர் என்ற தத்துவத்தையும் உணர்த்தி நிற்கின்றதல்லவா?
“ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே வையகம் சூழ்கவே!”
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி