November 28, 2016

Fundamental of Financial Planning

1. 30 % of your income must be used for monthly living expenses.
2. 30% of your income must be used for Liabilities repayments
3. 30% of your income must be SAVED for your future LIVING.
4. 10% of your income must be spared for entertainments, vacations………..
5. 6 moth monthly income must be available for emergency fund  { LIQUID FUND },  it can be CASH or cashable investments
6. Home loan must be registered and apply  on both husband and wife name.  { Both can get benefits on Home loan Tax benefits }
7. Buying second house for investment is not advisable  [ Survey reports - it will fetch you only around 3% return]
8. After age 45 years not supposed to enter into any BIG LIABILITIES [ Higher education of children and wedding of children will happen around 45 to 50 only ]
9. Joint account is compulsory @ Bank savings account.
10. Property must be registered on both Husband and wife name. [  As per legal act – after husband first legal heir is wife, after wife it will go to children only ]
11. Regular check on Nominations at all financial instruments
12. Only in insurance policy,  Claims payable to Nominee.  In other financial instruments legal heirs certificate is must to get back the settlement
13. 2 moths salary must be parked on LIFE INSURANCE POLICY [ it’s a universal thumb rule on insurance ]
14. Don’t take any financial investment decisions by EMOTIONALLY
15. MEDICLAIM is must [ in spite of Group mediclaim coverage given at office [ After retirement there is no mediclaim coverage. After 50 years its very tough to enter into mediclaim ]
16. For your jewelry LOCKER,  Only one lakh is payable by bank,  if theft or fire happen at bank. Provided insurance done.
17. Like same way Government guaranteed only one lakh for your FD also. [ Fixed deposits with Banks upto Rs. 1 lakh only are backed by deposit insurance ]
18. Must know all tax implications.  You cannot avoid paying tax. But you can minimize by way of investments.
19. All financial documents must be kept safely.
20. Financial investments must be fallowed through personal financial advisor.
21. Review your financial port folio by every six month.

லலிதா சகஸ்ரநாமம்

லலிதா என்றால் விளையாடுபவள்!

லலிதா மகா திரிபுரசுந்தரி, சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்க முடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.

சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள், தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.

லலிதா தேவியின் ஆயிரம் நாமங்களில் திரும்ப வராமல், ஒரு முறை மட்டுமே வரும் பெருமை கொண்டது லலிதா சகஸ்ரநாமம்.

லலிதாதேவியின் கட்டளையின் பேரில் வஸினி, காமேஸ்வரி, அருணா, விமலா,ஜெயினீ, மோதினீ, சர்வேஸ்வரீ, கௌலினி என்ற எட்டு வாக்தேவதைகளால் (வாக்கை அருள்பவர்கள்) உருவாக்கப்பட்ட இந்த ஸ்லோகம் பாராயணம், ஹோமம், அர்ச்சனை போன்ற முறைகளில் வழிபடப்படுகிறது.

தேவியின் தலை முதல் பாதம் வரை

லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தில், அன்னை லலிதாதேவி மகாமேருவில், நகரத்தில், மகாபத்ம வனத்தில்,சிந்தாமணி கிரகத்தில் அனைத்து கடவுளரையும் தனக்குள் கொண்டவளாக, அதியற்புத அழகுடன், ஆற்றலுடன், அனைவரையும் அபயம் அளித்துக் காப்பாற்றும் சர்வானந்தமயி தேவி, லலிதா திரிபுர சுந்தரியாக, மகாசக்தி தேவதையாக அமர்ந்து அருள்பாலிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தேவியின் தலை முதல் பாதம் வரை கேசாதிபாத வர்ணனையாக, பஞ்ச க்ருத்தியங்களான ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்காரம், திரோதானம், அனுக்கிரகம் இவற்றை, பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், சதாசிவன் இவர்களின் தன்மையைத் தன்னுள் கொண்டு தானே பஞ்ச பிரம்ம ரூபிணியாக இந்தப் பிரபஞ்சத்தை நடத்துவதாக வர்ணிக்கப் படுகிறாள். தேவியின் ஒவ்வொரு நாமமும் தேனாய் இனிக்கும் பொருள்களைக் கொண்டவை.

பிரம்மாண்ட புராணத்தில், குடந்தைக்கு அருகிலுள்ள திருமீயச்சூரில் விஷ்ணுவின் அவதாரமான சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர், அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளைப் பின்வருமாறு கூறுகிறார்:

“தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது.

இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப் போக்கும். செல்வத்தைஅளிக்கும். அகால மரணம் ஏற்படாது. நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்குப் பிள்ளைச் செல்வம் தரும்.

கங்கை முதலிய புண்ணிய நதிகளில் முறைப்படி பல தடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்டைசெய்தல், க்ரஹண காலத்தில் கங்கைக் கரையில்அசுவமேத யாகம் செய்தல், பஞ்சகாலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம்செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்த புண்ணியமானது லலிதா சகஸ்ரநாமப் பாராயணம்.”

அனைத்துக் கடவுளையும் வழிபட்ட புண்ணியம்.

இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைத் தவிர வேறு உபாயம் இக்கலியுகத்தில் இல்லையென்று கருதப்படுகிறது.

பவுர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில், சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள்.

எதிரிகள் நல்லிணக்கத்திற்கு வருவார்கள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான் என்று கூறப்படுவதுண்டு.

இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும். ஶ்ரீவித்யை போன்று மந்திரமோ, ஶ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.

''பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஶ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது” என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.

லலிதா சகஸ்ரநாமத்தின் இன்னொரு சிறப்பு, இதைப் பாராயணம் செய்யும்போது அனைத்துக் கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்குச் சேரும்.

ஆடி வெள்ளிகளில் மட்டுமன்றி அனைத்து வெள்ளிக் கிழமை மற்றும், தேவிக்கு உகந்த நாட்களில் லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறோமோ அது தானாய் வந்து சேரும்.

தேவி எப்பொழுதும், எந்த கஷ்டம் வந்தாலும் நம்மைக் கவசமாய் நின்று காப்பாள். அன்னை லலிதா திரிபுர சுந்தரியின் அழகிய நாமங்களை அனுதினமும் சொல்வோம். அவள் அருளைப் பெறுவோம்

November 24, 2016

ரூபாய் நோட்டு ஒழிப்பும்..எதிர்பார்ப்பும்

ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கை முன்னெப்போதும் எடுக்கப்படாத, மிகுந்த ஆபத்துகள் நிறைந்த அரசியல் முடிவு. இந்த நடவடிக்கை ஊழல், கறுப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றிற்கு எதிரானது. தேச பாதுகாப்புடன் தொடர்புடையது.இது திடீரென எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டு மிக ரகசியமாக எடுக்கப்பட்டுள்ளது.
சிரமங்கள் தவிர்க்க முடியாதது

மக்களின் சிரமங்கள் தவிர்க்க முடியாதது. இந்த நடவடிக்கையை சிரமமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. இந்திய அரசியல் சூழலில் இவ்வளவு நாட்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததே மிகப்பெரிய விஷயம். மக்களின் சிரமங்களை தவிர்ப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை. சிலர் சொல்வதை போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் திட்டம் கசிந்திருக்கும்.
புதிய நோட்டுகள் தேவையான அளவு அச்சடிக்கப்பட்டு அவை நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டால் அனைவருக்கும் முன்பே திட்டம் தெரிந்து விடும். திட்டம் பயன் அளிக்காமல் போய்விடும்.

பிரதமர் மோடி ரூபாய் நோட்டு ஒழிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பின்னர் 2 நாட்கள் வங்கி ஏ.டி.எம்.,கள் செயல்படவில்லை. முதல் 2 நாட்களில் 1.25 லட்சம் மையங்களுக்கு புதிய நோட்டுகள் கொண்டு செல்லப்பட்டது. அடுத்து 2 நாட்களில் 3 லட்சம் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பண கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்

குறிப்பாக, நக்சல் பாதித்த பகுதிகள், பயங்கரவாத அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகள், வட கிழக்கு மாநிலங்கள் என அபாயகரமான பகுதிகளுக்கு மிக ரகசியமாக பாதுகாப்புடன் பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பார்ப்பதை போன்று சில நாட்களுக்குள்ளாகவே அனைத்து இடங்களுக்கு தேவையான பணத்தை கொண்டு செல்ல முடியாது. அதில் பாதுகாப்பு சிக்கல் உள்ளது. இருப்பினும் மக்களின் பணத் தட்டுபாடு படிப்படியாக குறையும்.

தேச பாதுகாப்பு

ரூபாய் நோட்டு ஒழிப்பு அறிவிப்பு வெளியான பின்னர் காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. பயங்கரவாத அமைப்புகளிடம் உள்ள கோடிக்கணக்கான பணம் செல்லாமல் போனது. 50 - 60 ஆயிரம் கோடி அளவிலான பணம் நக்சல் பயங்கரவாதிகளிடம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பணம் முழுவதும் தற்போது வெறும் காகிதமாக மாறியுள்ளது.

நிதி பற்றாகுறையை குறைக்கும்

இந்தியா பொருளாதாரத்தில் 90 சதவீதம் பணப்புழக்கம் சார்ந்த ரொக்க பொருளாதாரம் ஆகும். நாட்டில் புழக்கத்தில் உள்ள பண மதிப்பில் 87 சதவீதம் 500, 1000 ரூபாய் நோட்டுகள் என சொல்லப்படுகிறது.

கிட்டதட்ட 14 லட்சம் கோடி 500, 1000 ரூபாய் நோட்டுகளாக புழக்கத்தில் உள்ளது. 4 லட்சம் கோடி கறுப்பு பணமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அவை மீண்டும் புழக்கத்திற்கு வராது. இதன் மூலம் அரசு கஜானாவில் 4 லட்சம் கோடி வரவு செய்யப்படும். இது அரசின் நிதி பற்றாகுறையை குறைப்பதற்கு பெரிதும் உதவும். மீதி உள்ள 10 லட்சம் கோடி மக்களிடம் புழக்கத்தில் சுற்றி வரும்.

வங்கிகள் வளர்ச்சி பெறும்

அரசின் நடவடிக்கையால் வங்கிகளில் சேமிப்பு பெரும் அளவு உயர்ந்துள்ளது. நம் நாட்டில் பணம் இல்லாத பொருளாதாரத்திற்கு வாய்ப்பில்லை. இருப்பினும், குறைந்த மற்றும் எல்லையுடைய பண பொருளாதாரத்திற்கு மாற உள்ளோம்.

வீட்டில் முடங்கிய பணம் வங்கிகளில் டெபாசிட் செய்வதன் மூலம் பல நன்மைகள் விளையும். உதாரணமாக, வங்கிகள் தங்களிடம் உள்ள பண இருப்பில் 75 சதவீதத்தை கடனாகவோ அல்லது தொழில்களுக்கு முதலீடாகவோ அளிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

அதன்படி, நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அதிகப்படியான கடன் வழங்கப்படும். அந்த கடனுக்கான வட்டி தற்போது உள்ளதை காட்டிலும் குறையும். தற்போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிகாக வெளிநாட்டு முதலீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அந்த நிலை முற்றிலும் மாறும்.

வங்கியில் உள்ள அதிகளவு பண இருப்பு கடன், முதலீடு போன்றவற்றால் அதன் மதிப்பு 3 அல்லது 4 மடங்கு உயரும்.

இதன் மூலம் நாட்டில் வேலை வாய்ப்பு பெருகும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.
ஜி.டி.பி., வளர்ச்சி உயர்வதால் மட்டும் நாட்டின் வேலைவாய்ப்பு அதிகரிக்காது. வேலைவாய்ப்பு துறையில் அதிக முதலீடுகள் செய்வதன் மூலமே வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க முடியும்.

நிலங்களின் விலை குறையும்

ரியல் எஸ்டேட் துறையை பொறுத்த வரை 100 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பினாமிகளிடம் உள்ளதாக சொல்லப்படுகிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றம் ஏற்படும். நகர்புறங்களில் உள்ள நிலங்களின் மதிப்பு 30 லிருந்து 40 சதவீதம் குறையும்

மக்கள் பாராட்டுக்குரியவர்கள்

பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு தந்துள்ளார்கள். இந்திய நாட்டு மக்களின் பொறுமை பாராட்டத்தக்கது. வங்கிகள், ஏ.டி.எம்.,மையங்களில் மிகுந்த பொறுமையுடன் 5 மணி நேரம் வரை கூட காத்திருந்து பணத்தை எடுத்து செல்கின்றனர். மக்களின் ஆதரவு பாராட்டுக்குரியது.

துணிச்சல் மிகு நடவடிக்கை

ஊழலால் நாட்டின் பொருளாதாரம் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. நாட்டின் அரசியல், சமூக கட்டமைப்பு, தார்மீக பொறுப்புணர்வை பாதிக்க கூடியது.

ஊழலுக்கு எதிரான பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமான துணிச்சல் மிகு நடவடிக்கை.

November 18, 2016

Important religious days of year 2017

January 2017
11 Wednesday Arudra Darshan
13 Friday Bhogi Pandigai
14 Saturday Pongal
15 Sunday Mattu Pong al
27 Friday Thai Amavasai

February 2017
03 Friday Ratha Sapthami
10 Friday Thai Pusam
24 Friday Shivaratri

March 2017
11 Saturday Masi Magam
14 Tuesday Karadaiyan Nombu
29 Wednesday Telugu New Year

April 2017
05 Wednesday Rama Navami
09 Sunday Panguni Uthiram
14 Friday Puthandu, Vishu
28 Friday Akshaya Thiruthiyai
30 Sunday Sankara Jayanthi

May 2017
01 Monday Ramanuja Jayanthi
04 Thursday  Agni Nakshatram Begins
10 Wednesday Chitra Pournami
28 Sunday  Agni Nakshatram Ends

June 2017
07 Wednesday Vaikasi Visakam

July 2017
23 Sunday Aadi Amavasai
26 Wednesday  Andal Jayanthi
27 Thursday Garuda Panjami

August 2017
02 Wednesday Aadi Perukku
04 Friday Varalakshmi
07 Monday Avani Avittam *Rigveda, Avani Avittam *Yajurveda
08 Tuesday  Gayathri Japam
11 Friday Maha Sangada Hara Chathurti
14 Monday Gokulastami
15 Tuesday Gokulastami
25 Friday Samaveda Upakarma, Vinayagar Chathurthi

September 2017
04 Monday Onam
10 Sunday Maha Bharani
13 Wednesday Ashtami Rohini
18 Monday Magha Shraddha
19 Tuesday Mahalaya Amavasai
21 Thursday Navarathiri
29 Friday Ayutha Poojai, Saraswati Poojai
30 Saturday Vijaya Dasami, Vidyarambham

October 2017
18 Wednesday Deepavali
19 Thursday Lakshmi Puja, Kedara Gowri Vratham
25 Wednesday Soorasamharam

November 2017
24 Friday Subrahmanya Sashti

December 2017
02 Saturday Karthigai Deepam
18 Monday Hanumath Jayanthi
29 Friday Vaikuntha Ekadashi

சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து!!

_சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?_

_உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!_

_உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்!!_

_வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர்!_

_அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!_

_அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!_

   _உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!_

_"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!_

_நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!_

_தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!_

_அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.  உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!_

_வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!_

_உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!_

_நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!_

 _உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!_

_நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!_

_சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!_
_எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!_

_நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட  உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!_

_நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!_நொறுங்கத் தின்னா நூறு வயசு..உமீழ் நீர் உயிர் நீர்.

November 08, 2016

Journey of Indian Stock market


1979 - Sensex 100
1981 - Sensex = 173
1983 - Indian Cricket Team winning World Cup. Sensex = 212
1984 - Indira Gandhi shot dead & Bhopal Gas tragedy. Sensex = 245
1989 - Hung parliament with Congress outside support. Sensex = 714.
1991 - Rajiv Gandhi assassination. Sensex = 1168
1992 - Indian Economy opening up. Dream budget by MMS. Harshad Mehta Scam. Sensex = 4285.
1993 - Blast in Mumbai. Also at BSE buidling. Riots all over. Sensex = 2281.
1996 - Indian stock market goes digital with NSE's new trading platform. Sensex = 3367.
1999 - NDA coming to power with Atal Bihari Vajpayee as PM. Sensex = 3740.
2000 - Technology boom. Sensex = 5001.
2001 - Gujarat earthquake. Sensex = 3640.
2003 - Big bull run start in Dalal Street. Sensex = 3049.
2004 - UPA coming to power with Left party support. Sensex = 5591.
2006 - Sensex conquering 10000.
2007 - Sensex conquering 20000.
2008 - Sensex falling after touching high of 21200. Crude oil rising upto $ 147.
2009 - Sub-prime crisis in USA bring financial instability worldwide. Sensex = 9568.
2010 - Satyam scam, Common wealth scam, Telecom scam. Sensex = 17590.
2013 - Young Raghu Ram Rajan appointed RBI governor. Sensex = 18835.
2014 - BJP alone conquering 283 seats in Lok Sabha and NDA coming to power with 330 seats. Sensex = 25000.
(March Closing Sensex quotes for all above)

04/03/2015 - Sensex = Life Time High 30025!
28/10/2016 = Sensex = 27958

Sensex has grown almost 300 times in last 37 years!

It is clear that in all Adversity & Prosperity, Sensex has grown. Surely there have been downside also. But sooner or later that downside have always been overcome. Be a Systematic & Disciplined Investor. Save Wisely, Invest Smartly! Do you want to Invest In Mutual Fund Call Us +91 98400 44721

November 07, 2016

MUTUAL FUND INVESTMENTS ARE SUBJECT TO MARKET RISKS Read all Scheme related documents carefully!

Dear Investors,
Above Headlines as per SEBI guidelines all mutual fund advertisement,scheme documents print in the very small font.I think most of us unable to read also.I like to share with you few  AMFI data as on October 31,2016.
ALL TIME HIGH INDIAN MUTUAL FUND INDUSTRY..
  • Total Number of Investor accounts/Folio cross More than Five Crore
  • Total Number of SIP Investor account alone cross more than 1 Crore Mark..
  • Total Asset under  management  all scheme more than 16 LAKHS CRORE.
  Thank you for all Investors participate in the Journey and Great Success  .Please share with your Friends and Family members.Understand the Market Risk  Carefully ,Choose the Scheme Carefully and Invest Today .More detail contact us.Mutual Fund Agent AMFI Registration Number ARN-928 .Mobile Number +91 98400 44721

அழகன் முருகனின் சில அருமையான சில பாடல்கள்!


எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா வா.. என்று எவர் எப்படி மனம் உருகி அழைத்தாலும் அந்த ஊர் வருபவன், இந்த தமிழ் படைத்த முருகன் அல்லவோ.. குமரகுருபரனின் கந்தர் கலி வெண்பா, நக்கீரன் திருமுருகாற்றுபடை பறைசாற்றும் முருகனை. சுந்தரம்பாள் அழைக் கிறார்.

------------------------------

வேலோடு மயிலேறி விரைந்தோடி வா... எங்கள் பிணி தீர்க்க வா.... விரைந்தோடி வா வா... நாமும் அவர் பின்னால் நின்று அவனை அழைப்போம்...வருவான் வடிவேலன் ! நம்பினோருக்கருளும் முருகன் !

------------------------------

வந்த வினையும் வருகின்ற வல்வினையும்;
கந்தன் என்று சொல்ல கலங்குமே - செந்தில்
மாநகர் சேவகா என்று உன் திருநீரு
அணிவொர்க்கு மேவ வாரதே வினை.

------------------------------

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன்
பன்னிருகைக் கோலப்பா - வானோர் கொடிய
வினைத் தீர்த்தருளும் வேலலப்பா-செந்தில்வாழ்வே!

------------------------------

ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார் வினைகள் தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே!
ஆறுபடை வீடு கொண்ட ஆறுமுகத் தெய்வம்
வேறுபடை தேவையற்ற வேலவனாம் தெய்வம்
யாருமற்ற அடியவரை ஆட்கொள்ளும் தெய்வம்
கூறும் வேதத்து உட்பொருளாய் குளிர்ந்து
நின்ற தெய்வம்.

------------------------------

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தா குலமானவை தீர்த்தெனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.

------------------------------

ஆடும் பரிவேல் அணிசேவல் என
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானை சகோதரனே.

------------------------------

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து
மைந்தன் என்மீது மனமகிழ்ந்து அருளித்
தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள்செய்.

------------------------------

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே- ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.

------------------------------

வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்குமே! "செந்திநகர்ச்
சேவகா' என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை.

------------------------------

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும்
என்றன் உள்ளத் துயரை ஒழித்தருளாய் ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே.

------------------------------

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச்
செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்
விரித்தோனைவிளங்கு வள்ளிகாந்தனைக்
கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனை
சாந்துணையும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே!

------------------------------

விழிக்குத் துணை மென்மலர்ப் பாதங்கள்
மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா
என்னும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.

------------------------------

சிந்தாமணியே திருமால் மருகா
வந்தார்க்கு உயர்வாழ்வு கொடுத்தருள்வாய்
நொந்தாழ் வினையேன் முகநோக்கி வரம்
தந்தாய் முருகா தணிகா சலனே.

------------------------------

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

ஸ்ரீ கந்த சஷ்டி திருவிழா


ஸ்ரீ முருகப்பெருமான் சூர-பத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கந்தபுராணத்தில் ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

கண்ணாடிக்கு அபிஷேகம்
திருச்செந்தூரில் கந்த சஷ்டியின் போது ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். "சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம்.

அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் 'அஞ்சேல்!' எனவேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
'முருகா!' என்று ஓதுவார் முன்.
(- திருமுருகாற்றுப்படை)

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் !! ஹீலர் பாஸ்கர்

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள்!!

1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் .

2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.

3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்

4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)


5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.

6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.

7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.

8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)

9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது.

10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.

11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது .

12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும் .

14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது

15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம்.

16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம் .

17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.

18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்.

19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.

20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.

21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.

22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.

23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.

24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.

25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.

26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.

27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.

29.எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்.

30.ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும்..

நல்லதை மட்டுமே தருவோம்!

அது ஒரு வானம் வஞ்சம் தீர்த்த வறண்ட கிராமம்!

பல குடும்பங்கள் ஊரை காலிசெய்துவிட்டு நகரத்தார் வாகனங்களுக்கு ரோடு போட சாலையோரமாய் குடிபெயர்ந்துவிட்டார்கள்!
ஊரை விட்டு பிரிய மனமில்லாமல் ஊரோடு ஒட்டிக்கொண்ட ஒரு சில குடும்பங்களில் ராமசாமியின் குடும்பமும் ஒன்று!

ராமசாமிக்கு மூன்று பிள்ளைகள்! இது தவிர ஒரு ஒரு தாய் ஆடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளும் இருக்கின்றன, அதோடு நான்கு முருங்கை மரங்களும் இருக்கின்றன! ஆடும் குட்டிகளும் வருடாந்திர செலவுகளுக்கும், முருங்கை மரங்கள் வாராந்திர செலவுகளுக்கும் உதவுகின்றன! சீசன் வரும்போது ஐந்து கிலோ பத்து கிலோ என்று காய்க்கின்ற முருங்கைகள் மற்ற நாட்களில் ஒரு கிலோ இரண்டு கிலோவோடு நிறுத்திக்கொள்ளும்!

எவ்வளவு வந்தாலும் பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டால் ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது ராமசாமியின் வழக்கம்! முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்!
ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்! இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார்!

பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை, ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்! காரணம் ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!

ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்செல்ல, சிறிது நேரத்தில் பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க, அவருக்காக மளிகைக்காரர் எடைபோட அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது!

அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே,

இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே, அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்! நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்! நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்! கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார்! அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது, வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்! இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா, கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போன ராமசாமி, அய்யா மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்ல, ஒவ்வொரு முறையும்
-------------------------------------------------------
நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி
-------------------------------------------------------
தான் எடைபோட்டு கொண்டுவருவேன் இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ,

மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது!
தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!

இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும் அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது!

இது தான் உலகநியதி!

நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும் நல்லதை தந்தால் நல்லது வரும், தீமையை தந்தால் தீமை வரும்! வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம், ஆனால் நிச்சயம் வரும்! ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்!!

கடவுளைக் கண்ணால் காண முடியுமா?

கடவுளைக் கண்ணால் காண முடியுமா?''

(திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை)

"உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?''

"என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா நினைக்கின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.''

"தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். நீ படித்த அறிஞன்தான். ஆனால் நீ படித்த அறிவில் விளக்கம்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும்.
காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும்.
உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''

"ஆம். நன்றாகத் தெரிகின்றது.''

"அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?'' "என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாம்தான் தெரிகின்றது?''

"அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?'' "ஆம்! தெரிகின்றன.'' "முழுவதும் தெரிகின்றதா?'' அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது'' என்றான்.

"தம்பீ! உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?'' மாணவன் விழித்தான். "ஐயா! பின்புறம் தெரியவில்லை.''

"என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பலமுறை சொன்னாய். இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே.

சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?''

"முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.'' "அப்பா! அவசரம் கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றாயா? நிதானித்துக் கூறு....''

"எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.''

"தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''

"ஆம்! நன்றாகச் சிந்தித்தேச் சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.''

"தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றதா?

மாணவன் துணுக்குற்றான்.
நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தினான்.
பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம் தெரியவில்லை!'' என்றான்.

"குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முன்புறம் முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டிருக்கிறாய். இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்.
அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், நீயே சொல்.''

"ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.''

"தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.''

"ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள்.''

"அப்பனே! அவை கடையில் கிடைக்காது. வேதாகமத்தில் விளைந்தவை அவை அதில்தான் கிடைக்கும். ஞான மூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும்.

ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.

"தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனைக் குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.'' அந்த மாணவன் தன் தவறை உணர்ந்து அவரின் காலில் விழுந்தான்.

Have you opened a new account with any Mutual Fund?

Have you opened a new account with any Mutual Fund between 1 Jul, 2014 & 31 Aug, 2015?
Then you are required to provide FATCA self-certification about your tax residency as per current law..

FATCA” or Foreign Account Tax Compliance Act is a United States (US) law aimed at prevention of tax evasion by US citizens and residents (“US Persons”) through use of offshore accounts.
Pursuant to the Inter-Governmental Agreement (IGA) signed between the US & Indian Governments on 9th July 2015, FATCA became effective in India (retrospectively) for all new accounts opened from 1st July 2014.
There are different rules for “pre-existing” and new investors as per FATCA provisions –
New investors” are defined as those investors who are new to a financial institution (FI) having opened an account with the FI on or after 1st July 2014.
Further, all such new account holders need to certify their tax status to the financial institutions. In addition as per IGA provisions and as per clause 5.9.6 and 5.9.7 of the Guidance Notes issued by CBDT, in case of accounts other than depositories or cash value accounts, the financial institutions need to make reasonable efforts to obtain self-certification, particularly in those cases where after “US indicia” search, a positive match was found with any of the US indicia.
The IGA signed by India and US has a specific “alternate procedure” to handle all “new investor” accounts opened by a financial institution between 1st July 2014 and date of signing IGA. As per this clause, financial institutions were allowed one year to solicit tax residency self-certification from all investors who opened account in above period, failing which the accounts must be closed.

Thus, if you have opened new account/ folio with any Mutual Fund between 1st July 2014 and 31st August 2015 (i.e., with whom you had not invested prior to 1stJuly 2014), you need to provide a self-certification about your tax residency to the respective Mutual Funds for compliance with FATCA, failing which the account/s may have to be closed, as per current law.

On August 31, 2016, the CBDT has issued a press release extending the deadline of August 31, 2016 (for the time being) for obtaining the self-certifications.
However, it is in the investors to provide the same without any further delay.
Mutual Funds have been making sustained efforts to collect the FATCA self-certification from the investors who have opened new accounts / folios during the aforesaid period to confirm their tax residency. However, there are still a large number of investors who are yet to provide the same.
If you have opened new account with any Mutual Fund between 1st July 2014 and 31st August 2015 and have not yet submitted your FATCA self-certification form, please contact the respective Mutual Funds and submit the same asap.
You may also submit the same on-line through the respective Mutual Fund Registrars as per the links provided below:
www.camsonline.com/FATCA/COL_FATCAMainPage.aspx
Mutual Funds serviced by CAMS –
Birla Sunlife Mutual Fund; DSP BlackRock Mutual Fund; HDFC Mutual Fund; HSBC Mutual Fund; ICICI Prudential Mutual Fund; IDFC Mutual Fund; IIFL Mutual Fund; JP Morgan Mutual Fund; Kotak Mutual Fund; L&T Mutual Fund; Mahindra Mutual Fund; PPFAS Mutual Fund; SBI Mutual Fund; Shriram Mutual Fund; Tata Mutual Fund; and Union KBC Mutual Fund.
www.karvymfs.com/karvy/fatcahome.aspx
Mutual Funds serviced by Karvy –
AXIS Mutual Fund, Baroda Pioneer Mutual Fund, BOI AXA Mutual Fund, Canara Robeco Mutual Fund, Deutsche Mutual Fund, Edelweiss Mutual Fund, Goldman Sachs Mutual Fund, IDBI Mutual Fund, Indiabulls Mutual Fund, JM Financial Mutual Fund, LIC Nomura Mutual Fund, Mirae Asset Mutual Fund, MotilalOswal Mutual Fund, Peerless Mutual Fund, DHFL Pramerica Mutual Fund, Principal Mutual Fund, Quantum Mutual Fund, Reliance Mutual Fund, Religare Invesco Mutual Fund, Sahara Mutual Fund, Taurus Mutual Fund, UTI Mutual Fund
www.sundarambnpparibasfs.in/web/service/fatca/
Mutual Funds serviced by Sundaram BNP Paribas Fund Services –
Sundaram Mutual Fund and BNP Paribas Mutual Fund
Franklin Templeton Mutual Fund –
www://online.franklintempletonindia.com/aspx_app/Investors/fatca/Inv_FatcaDetails.aspx
Do you need update FATCA Contact us.+91 98400 44721

MUTUAL FUND INVESTMENTS ARE SUBJECT TO MARKET RISKS !

Indian Mutual Fund industry’s Avg. Assets Under Management (AAUM) crosses Rs.16.8 Lakh Crore (INR 16.8 Trillion) – an all time high!

Average Assets Under Management (AAUM) of Indian Mutual Fund Industry for the month of October 2016 has crossed Rs. 16.8 lakh crore, while the Assets Under Management (AUM) as on October 31, 2016 has crossed a landmark of Rs. 16 Lakh crore and stood at Rs.16.30 lakh crore…the highest ever AAUM/ AUM, so far.
The AUM of the Indian MF Industry has grown from Rs. 3.26 trillion as on 31st March 2007 to Rs. 16.30 trillion as on 31st October, 2016, which is the highest AUM ever … a five-fold increase in a span of less than 10 years !!
The MF Industry’s AUM has more doubled in the last 4 years from Rs 5.87 trillion as on 31st March, 2012 to Rs. 12.33 trillion as on 31st March, 2016
The Industry’s AUM had crossed the milestone of Rs10 Trillion (Rs.10 Lakh Crore) for the first time in May 2014 and in a short span of two years the AUM size has crossed Rs.15 lakh crore last month.
The total number of accounts (or folios as per mutual fund parlance) as on October 31, 2016 stood at 5.13 crore (51 million), while the number of folios under Equity, ELSS and Balanced schemes, wherein the maximum investment is from retail segment stood at 4.1 crore (41 million).
Do you want to invest in Mutual Fund ..A to Z mutual fund service contact us +91 98400 44721

Mutual Fund SIPs accounts cross 1 CRORE mark !

Mutual Fund SIPs accounts cross 1 CRORE mark ! And the total amount collected through SIP during September 2016 was close to Rs.3700 crore.

Indian Mutual Funds have currently about 1.13 crore (11.3 million) SIP accounts through which investors regularly invest in Indian Mutual Fund schemes.
Systematic Investment Plan or SIP as it is commonly known, is an investment plan (methodology) offered by Mutual Funds wherein one could invest a fixed amount in a mutual fund Scheme periodically at fixed intervals – say once a month instead of making a lump-sum investment. The SIP instalment amount could be as small as Rs.500 per month. SIP is similar to a recurring deposit where you deposit a small /fixed amount every month.
SIP is a very convenient method of investing in mutual funds through standing instructions to debit your bank account every month, without the hassle of having to write out a cheque each time.
SIP has been gaining popularity among Indian MF investors, as it helps in Rupee Cost Averaging and also in investing in a disciplined manner without worrying about market volatility and timing the market.
AMFI data shows that the MF industry has been adding about 6 lacs SIP accounts each month on an average during the current financial year, with an average SIP size of about Rs.3,300 per SIP account.

Have you started investing through SIP?
If not, open a SIP account right away.  More detail call us +91 98400 44721