January 26, 2017

வேண்டும்!வேண்டும்! டாஸ்மாக் வேண்டும்- அரசு



குடி குடியை கெடுக்கும்..இது படித்தவனுக்கும் தெரியும் ..படிக்காதவனுக்கும் தெரியும்..
பாமரனுக்கும் தெரியும்..பாரதபிரதமருக்கும் தெரியும்..முதல்மந்திரிக்கும் தெரியும்..நீதிபதிக்கும் தெரியும்..எனக்கும் தெரியும் ..உங்களுக்கும் தெரியும்..இந்த கடையை மூடுவதற்கு ..யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்..? நீதி மன்றத்திலா..?அவசர சட்டமா..? நிரந்தர சட்டமா..?இல்ல பீட்டாவிற்கு தடை வாங்க வேண்டுமா..? எதிர் கட்சிகள் அனுமதி வேண்டுமா?..யார் அனுமதி வேண்டும்?..மத்திய அரசா? மாநில அரசா?..இளைஞர்களின் போராட்டம் வேண்டுமா? பெப்சி,கோக் விட சிறந்த பாணமா?தமிழ் நாட்டின் பொருளாதாரம் பாதிக்குமா?ஏன் இந்த தாமதம்..முதல்வரின் ஒரு கையெழுத்து..இந்த தமிழனின் தலையெழுத்தை மாற்றும்..யார் அந்த முதல்வர்?